Shopping Cart

Description:
எமது கல்விப் பொறிமுறையில் சிக்கித் தங்களது அழகான பிள்ளைப் பருவத்தை இழந்துவிட்ட ஆக்கத்திறன் மிக்க பிள்ளைகளுக்காகவே இந்த நூலை எழுத நினைத்தேன்.
இந்தக் கதைகளை நான் எழுதும் போது எனது மனதிற்கு அதிக சுதந்திரம் வழங்கியதோடு அதே சுதந்திரத்தை எனது பேனாவுக்கும் கொடுத்தேன். இது பற்றி வாசகர்களின் மதிப்பீட்டையோ விமர் சனத்தையோ நான் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இது இவ்வாறு தான் எழுதப்பட வேண்டும். இவையாவும் வரலாற்றுக்குச் சொந்த மாகிவிட்டதனால் இவற்றை மாற்றி எழுத முடியாது நகர்ப்புறச் சூழல் ஒன்றில் போதிலும், எனக்கு இருந்த சுதந்திரம், நான் பெற்றுக் கொண்ட தேர்ச்சிகள், அனுபவங்கள் என்பவற்றின் மூலம் என்னிடம் காணப்படக்கூடிய பயனுள்ள இயல்புகள் போசிக்கப்பட்டன என்பதே எனது நம்பிக்கை.
இன்றைய பிள்ளைகளின் வாழ்க்கை முறை உண்மையிலேயே பெருமளவு வித்தியாசமானது. சமூகப் பண்புகள், பொருளாதாரப் போக்குகள் முதலிய அனைத்தும் மாற்றமடைந்துள்ளன. சார்ள்ஸ் டார்வினின் கூற்றுப்படி சூழலுக்கு மிக விரைவாகவும் சிறந்த முறை யிலும் இசைவாக்கமடையும் ஓர் உயிரியால்தான் தப்பிப் பிழைத்து தனது சந்ததியை முன்னெடுத்துச் செல்ல முடியும். அன்றைய சிறுவர் களாகிய எம்மிடம் இருந்த அறிவை விட இன்றைய சிறுவர்களின் அறிவு நிஜமாகவே முன்னணியில் இருக்கிறது. அன்றைய சிறுவர்கள் அதிக சந்தோஷமாக இருந்தார்களா, இன்றைய சிறுவர்கள் அதிகம் சந்தோஷமாக இருக்கிறார்களா என்பது பற்றி நான் கணிப்பீடுகள் எதுவும் செய்யாததனால், அது பற்றி என்னால் எதுவும் கூற முடியாது.
எனது பிள்ளைப் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட சில அனர்த்தங்களே இவை எனக் கூறினால் பிழையாகாது. எப்படியிருப்பினும் சிறியவளான நான், இலங்கையின் தலைசிறந்த தொழில் முயற்சியாளருக்குரிய தேசிய விருதைப் பெற்றுக்கொள்ளும் வரையான எனது வாழ்க்கைப் பயணத்திற்கு, எனது பல்வகைமை மிக்க பிள்ளைப் பருவமே துணை யாக அமைந்தது என்பது உண்மையே. இது அந்தக் காலத்துப் பிள்ளை யொன்றின் கதையாகும்.