Shopping Cart

Description:
சிறு வயதிலிருந்தே பாடசாலைப் பாடமொன்றாக நாம் விஞ் ஞானத்தைக் கற்ற போதிலும் அதிகமானவர்களிடம் அது பற்றிய தவறான விளக்கமே இருக்கிறது.
மனித வர்க்கத்தின் முன்னால் இருக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய சர்வசக்தி வாய்ந்த மாயாஜாலம் ஒன்றாகச் சிலர் நவீன விஞ்ஞானத்தைக் கருதுகின்றனர்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நியம முறைமை ஒன்றின்படியே நவீன விஞ்ஞானம் முன்னேறுகிறது. அதற்கே உரிய பல எல்லைகளும் வரம்புகளும் விஞ்ஞானத்திற்கும் இருக்கின்றன.
இதுவரை சரிவரத் தீர்க்கப்படாத, அல்லது முழுமை யான விடை கிடைக்காத மர்மங்கள் பல நவீன விஞ்ஞானத்தின் முன்னே இருக்கின்றன.
அவற்றுள் சில பற்றிய குறுகிய விபரமொன்றே இந்நூலின் முதற் பகுதியில் தரப்பட்டுள்ளது.